Joy...Smart...Incredible

shoot for the moon, at least you will end up among the starzzz

10:18 AM

அனுபவ துளிகள்..

Posted by Esywara


peepingatyou.blogspot.com ,proudly presents it's very first guest article, discussing greatly in depth on the traits we as youths should posses in developing our character, attitude and aim.The author who named himself 'saamaanyan' ( சாமான்யன் ),is incredibly astonishing as his writings are no-ordinary as his name suggests.
His blog http://malaysia-indian.blogspot.com/, nesting remarkable thoughts and truths as they are,
is-a-must-read.


தம்பி ஈஸ்வரா,

என் அனுபவங்களை மையமாக வைத்து உன்னைப் போன்ற இளைஞர்களுக்கு பயன் படும் வகையில் ஒரு பதிவை எழுதும்படி கேட்டிருந்தாய், அதன் படியே இந்த பதிவை எழுதியுள்ளேன். கீழே உன்னைப் போன்ற இளைஞர்களுக்கு என் மனதில் பட்ட மூன்று அறிவுரைகளை கொடுத்துள்ளேன் அவை உன்னையும் உன் நண்பர்களையும் சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன். (அயிட்டம் 4 உன் வயதை ஒட்டியவர்களுக்கு ஆனது அல்ல. அது என்னை போன்ற பெரிசுகளுக்கான சங்கதி. அதை நீ கண்டு கொள்ளாதே) .

1). ஒற்றை லட்ச்சியத்தில் குறி வை

ஒரு லட்ச்சியத்தில் நீ குறிவைக்க வேண்டும். "என்ன அந்த லட்ச்சியம்?" என்று கேட்கிறாயா?. அது உன்னைப் பொருத்தது. எந்த விஷயம் உன்னை ஆழமாக பாதிக்கின்றதோ, எந்த விஷயம் உன் மனக் கண்ணில் எப்பவும் ஓடிக்கொண்டும் உருத்திக் கொண்டும் இருக்கிறதோ, எந்த விஷயத்தின் மீது உனக்கு ஈர்ப்பு மிக அதிகமாக இருக்கின்றதோ அதில் உன் முழு கவனத்தையும் செலுத்து. அந்த ஒற்றை விஷயத்தில் குறி வை. அதை அடைவதை, மேம்படுத்தி கொள்வதை உன் வாழ்க்கையின் லட்ச்சியமாக கொள்.

எழ்மை நிலையில் இருந்து வந்த எனக்கு, எனக்கென்று ஒரு வியாபாரத்தை நிலை நாட்டிக் கொள்வது ஒன்றுதான் முக்கிய லட்ச்சியமாக என் வாழ்நாள் முழுவதும் இருந்து வந்துள்ளது. சிறு வயதிலேயே என் உள்ளத்தில் நான் தைத்துக் கொண்ட அந்த ஒற்றை குறிதான் என் இளவட்ட நாட்களில் நான் பாதை தவறிச் செல்லாமல் என்னை நல்வழிப் படுத்திய 'திசை காட்டு நட்ச்சத்திரம்'. எனக்கு தெரிந்த வரையில் நம் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமானால், நம் சிந்தனை சிதறாமல் இருக்க வேண்டும். அப்படி சிந்தனை சிதறாமல் இருக்க, நம் அன்றாட நடைமுறை நிகழ்வுகளை தாண்டி,நம் சில்லரை சுய இன்பங்களை தாண்டி நம் மனத்தை நமக்கு நிறந்தர மகிழ்ச்சி கொடுக்க கூடிய ஒரு பெரிய லட்ச்சியத்தின் பால் திருப்பிவிட வேண்டும்.

அது படிப்பாக இருக்கலாம், பணம் ஈட்டுதலாக இருக்கலாம், குடும்ப ஒன்றியமாக இருக்கலாம், பொதுச் சேவையாக இருக்கலாம், அரசியல் ஈடுபாடாக இருக்கலாம், விளையாட்டு துறையாக இருக்கலாம், ஏன் ஆண்மீக ஈடுபாடாக கூட இருக்கலாம். ஆனால் அது உன் இப்போதைய நிலையை தாண்டிய, உன் தற்காலிக சுய இன்பத்தை தாண்டிய ஒரு பெரிய ஈர்ப்பாக, தூரநோக்கோடு கூடிய ஒரு நெடுங்கால 'தேடுதலாக' இருக்க வேண்டும். அப்படி இந்த ஒற்றை லட்ச்சியத்தை நீ உன் மனதில் ஆழமாக ஏற்றிக் கொண்டு விட்டாயானால், பெரும்பாலான நேரங்களில் அந்த லட்ச்சியம் உனக்கு கைகூடி வருவதோடு அல்லாமல், வாழ்க்கையின் பிற எல்லா விஷயங்களுமே உனக்கு சீராகி, நீ உன்னளவில் நிலை பெற்றுவிடுவாய். அதன் பிறகு வாழ்க்கை உனக்கு என்றும்
சுலபமாகவே தெரியும்.

2). வயதைப் பொருத்து தான் தூர நோக்கு இயல்பு

பொதுவாக நாம் சிறுவர்களாக இருக்கும்போது, நம் வயதைப் பொறுத்து நமது எண்ண ஓட்டங்கள் சில மணி நேரங்களில் இருந்து சில மாதங்கள் வரையானதாகவே இருக்கும். அதை தாண்டி வருடக்கணக்கில் எல்லாம் நாம் எதையும் சிந்திப்பதில்லை.

பிறகு ஒரு இருபது, இருபத்தைந்து வயதை எட்டும் போது அடுத்துவரும் சில வருடங்கள் வரை நாம் சிந்திப்போம்.

ஒரு முப்பது, முப்பத்தைந்து வயதை எட்டி குடும்பம், பிள்ளை, குட்டி என்று ஆனபிறகு நமது சிந்தனைகள் ஒரு ஐந்திலிருந்து பத்து வருடங்களை எடை போடுபவையாக அமையும்.

அதன் பிறகு ஒரு நாற்பது, நாற்பத்தைந்து வயதை தாண்டிய பிறகுதான் தலைமுறை கணக்குக்களை எல்லாம் உள்ளடக்கிய ஒரு தூர நோக்கும் இயல்புக்கே நாம் வந்து சேருவோம்.

இது மனிதராகப் பிறந்த யாவருக்கும் பொதுவான ஒரு அநுபவக் கூறு. மனிதனின் இந்த ஒற்றைக் குணாதிசத்தினால்தான், வயதான பெறியோர்களின் அறிவுரையை சிறு வயதுடையவர்களும், உன்னைப் போன்ற இளைஞர்களும் கேட்டு நடக்க வேண்டும் என்பது.

காரணம் உங்கள் வயதில் உங்களால் ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் பார்க்க முடியும், சிந்திக்க முடியும். அதை தாண்டி பார்ப்பதற்கான அனுபவமோ, மன முதிர்ச்சியோ, இயல்போ உங்களிடம் இருக்காது.

"ஓடுகிற பாம்பை காலால் மிதிக்கிற வயதில்" உங்களுக்கு எல்லாமே விளையாட்டாய் தான் தெரியும். எந்த விஷயத்திற்கும் நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொள்ள மாட்டீர்கள். ஆனால் கறு நாகம், ராஜ நாகம், கட்டு விரியன், கண்ணாடி விரியன், மலைப் பாம்பு என்று பொல்லாத பாம்புகளில் இருந்து சாரைப் பாம்பு, பச்சைப் பாம்பு, தண்ணிப் பாம்பு என்று 'பிஸ்கோத்து'பாம்புகள் வரை எல்லா பாம்புகளையும் பார்த்து பழக்க பட்டவர்கள் உங்களைச் சுற்றியுள்ள பெரியவர்கள்.

எதிரே வருவது என்ன ரகப் பாம்பு என்று ஐம்பது அடிகளுக்கு முன்ன்ரே குறிப்பரிந்து "இந்த பாம்பிடம் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்" என்று பக்குவம் சொல்லக் கூடிய அனுபவம் கொண்டவர்கள் அவர்கள். அத்தோடு உங்களோடு ரத்தத்தால் பிணைக்க பட்ட அவர்களை மிஞ்சி இந்த உலகில் வேறு யாரும் உங்கள் நலன்களில் அக்கரை கொண்டு இயங்கப் போவதும் இல்லை, இருக்க போவதும் இல்லை. இது தான் அப்பட்டமான உண்மை. ஆக உண்மை இப்படி இருக்க, நீங்கள் அவர்களை அணைத்து அனுசரித்து நடந்து கொள்வதில் என்ன பிரச்சனை உள்ளது ?

3). தனி மனித வழிகாட்டு பட்டியல்

உன் வயதில் பொருள் தேடும் பொருட்டு நான் என் தாய், தந்தையர், உற்றார், உறவினர் யாவரையும் நான் வளர்ந்த் சிற்றூரில் விட்டு விட்டு வெகு தூரத்தில் இருந்த மாநகரங்களில், ஒரு தனிமர வாழ்க்கையை வாழ்ந்தேன்.

அப்படி பட்ட கால கட்டத்தில் யார் அறிவுரையும் இன்றி, பெரியவர்களின் எந்த ஈடுபாடும் இல்லாமல்,தனியாக நான் பல முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைகளை சந்தித்திருக்கிறேன்.

இப்படிச் சூழ்நிலைகளில் எல்லாம் "நாம் எடுக்கிற இந்த முடிவு சரியா, தவறா? நாளை இந்த முடிவின் வெளிப்பாடு எப்படி அமையும்? இதை நினைத்து நாம் வருத்தப் படக்கூடிய சூழ்நிலை பிறகு ஏற்படுமா?"என்று பலவாறு குழம்பிய நிலையில் பல முறை திசை தெரியாது தவித்தும் இருக்கிறேன்.

நான் என் இளமைப் பருவத்தில் எதிர் கொண்ட அதே குழப்பம் இன்றும் இளைஞர்களுக்கு இருப்பதை பார்க்கிறேன். "தனி மனித அளவில் ஒரு இளைஞன் எப்படி வெவ்வேறு சுழ்நிலைகளில் முக்கிய முடிவுகளை எடுப்பது ? தடம் புரண்டு விடாமல் வாழ்க்கையை துணிகரமாக நடத்திச் சென்று அதை கடைசிவரை அவன் அர்த்தமுள்ளதாக ஆக்கிகொள்வது எப்படி ?" என்கிற கேள்விகளுக்கு இன்றும் பலருக்கு சரியான பதில் கிடைப்பதில்லை.

அந்த வகையில் என் தனி மனித சிந்தனை இதுதான்:

உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு எவை எவை முக்கியமானவை, எவையினால் உங்களுக்கு மன சந்தோஷம் ஏற்படும், எது எது நடந்தால் (அல்லது நடக்கா விட்டால்) உங்கள் மனம் நிலையான அமைதி, குதூகலம், இன்பம் எல்லாம் பெரும், என்பதை முதலில் ஆர அமர ஆழமாக யோசித்து முடிவு செய்து கொள்ளுங்கள்.

இது வெவ்வேறு மனிதருக்கு வெவ்வேறு முடிவுகளைக் கொண்டுவரும் ஒரு தனிமனித ஆய்வு. எனக்கு முக்கியம் என்று படுவது, உங்களுக்கு முக்கியமாக பட வேண்டும் என்று அவசியமல்ல.

ஒவ்வொருவர் இயல்பை பொறுத்து, அவரவர் கடந்து வந்த வாழ்க்கைப் பாதைகளைப் பொறுத்து 'எது முக்கியம்' என்பது வெவ்வேறாக நிர்ணயமாகும். அதன் பிறகு நீங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு முடிவை எடுக்கும்போதும் 'இது இது எனக்கு முக்கியம்' என்று நீங்கள் ஏற்கனவே நிர்ணயித்து வைத்துள்ள பட்டியலோடு, எடுக்கப் போகும் முடிவை ஒத்து பார்த்து, அந்த பட்டியலில் இருப்பவற்றுக்கு உகந்த வழியில் உங்கள் முடிவுகளை எடுத்து விடுங்கள்.

தவறு செய்து விட்டோம் என்ற குற்ற உணர்வு உங்களை பிறகு வாட்டாமல், வாழ்க்கையை கொண்டு செல்ல இதுவே சிறந்த வழி. இதற்கான நடைமுறை உதாரணத்தை என்னை மையமாக வைத்து ஒரு சுய ஆய்வு செய்து பார்க்கிறேன்.

"என் வாழ்வில் எது எது இருந்தால் எனக்கு நிலையான அமைதி, குதூகலம், இன்பம் எல்லாம் இருக்கும் ?"என்று நான் ஒரு பட்டியலை அமைத்தால், அது இப்படித்தான் இருக்கும் :-

1). என் மூதாதையர் பார்த்தால் என்னை மெச்சும் வகையில், சுற்றத்தையும், நட்பையும் ஆதரித்த, அனைத்த ஒரு பெரும்போக்கான வாழ்க்கையை வாழ்தல்.

2). என் பிள்ளைகளை சிறந்த படிப்புக்களை படிக்க வைத்து, அவர்களை ஆழ்ந்த குடும்ப, சமுதாய உணர்வு கொண்ட, சிந்தித்து செயல்படும் புத்திசாலிகளாகவும், குதூகல இயல்பு கொண்ட நல்ல மனிதர்களாக உருவாக்குதல்.

3). பிரச்சனை அற்ற நடுத்தர வாழ்க்கை நிலையோடு கடைசி வரை யாரையும் எதிர்பாராத வகையில் குடும்பத்தை கொண்டு செல்ல தேவையான பணத்தை சம்பாதித்து விடுதல்.

4). சுற்றம், நட்பு, குடும்பம், பிள்ளை, குட்டி என்று சந்தோஷமான குதூகலமான சூழலுக்கு நடுவில் என் மனைவியும், நானும் எங்களது குடும்ப வாழ்க்கையை அமைத்து கொள்ளுதல்.

5). குடும்பத்தில் உள்ள யாவரும் கடைசிவரை நோயற்ற உடல் கூறோடு வாழ்வதற்கு உகந்த வழியில்,உடல் நல விஷயங்களில் கண்டிப்பாக இருத்தல்.

இதுதான் எனக்கென்று நான் போடும், போட்டு கொண்ட 'வாழ்க்கை வழி காட்டு பட்டியல்'. இந்த மாதிரி நீங்களும் ஒரு பட்டியலைப் போட்டு பாருங்கள், எளிதில் விடை காண முடியாத பல விஷயங்களுக்கு உங்களுக்கு விடை கிடைக்கும். வாழ்க்கையில் 'இது தான் பாதை, இது தான் பயணம்' என்பதும் தெளிவாக புரிந்துவிடும்.

ஆனால், பட்டியலை போடுவதற்கு முன்பு ஆழமாக யோசியுங்கள். ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு

" BE CAREFUL OF WHAT YOU WISH FOR ! YOU MIGHT GET IT !!" .

4). பெரியவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு

அட்வைஸ் கொடுக்கிற mode ல் நான் இருப்பதால், இங்கு என்னைப் போன்று வயதானவர்களுக்கும் சேர்த்து ஒரு நடைமுறை அட்வைஸை கொடுத்து விட்டு செல்லாம் என்று நினைக்கிறேன்.

நான் ஒரு பெரிய குடும்பத்தைச் சார்ந்தவன். அண்ணன், தம்பி, பங்காளி, பகுத்தாளி, மாமன், மச்சான் என்று எனக்கு ஏகப் பட்ட உறவினர்கள். இந்த மாதிரியான சூழ்நிலையில் குடும்பம் சமமந்தப் பட்ட எந்த பிரச்சனையிலும் "அடுத்து என்ன செய்வது?" என்கிற முடிவுகளை எடுப்பது எனக்கு பலகாலமாக பெரும்பாடாகவே இருந்து வந்துள்ளது.

இந்த மாதிரி ஒருமுறை சுற்றங்கள் சம்மந்தப் பட்ட குடும்ப பிரச்சனைகளுக்கு முடிவு காண முடியாது நான் தவித்து நின்ற நிலையில் "நாளை நாம் மண்டையை போட்டால், அதற்கு பிறகு என்ன ஆகும்?"என்று எனக்கு நானே ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டேன்..

அடுத்து அந்த கேள்விக்கு பதில் என்ன என்று யோசிக்க ஆரம்பித்த உடனேயே, மேற்குறிப்பிட்ட அந்த விவகாரம் குறித்து நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெள்ளத் தெளிவாகி விட்டது.

பிரச்சனைகள் பெரிதாக உருவெடுத்து, அதற்கு முடிவெடுக்க முடியாத நிலையை நீங்கள் எதிர் கொண்டால், இதே கேள்வியை நீங்களும் கேட்டு பாருங்கள் ( 'நெருப்பு' எனற சொல்லும் சொல் ஒன்றும்சுட்டு விடாது. தைரியமாக கேட்டு பாருங்கள் ). எவ்வளவு சிக்கலான பிரச்சனைக்கும் உங்களுக்கு உடன் பதில் கிடைத்து விடும். வாழ்க்கையின் எல்லா பரிநாமங்களையும் மிஞ்சியது மரணம் ஒன்றுதான். எந்த நிமிடத்திலும் நிகழக் கூடிய அந்த மரணத்தை நினைவு கூர்ந்த மறு நிமிடமே மனத்தில் குப்பையும் கூழமுமாக பல காலம் தேங்கி கிடந்த சில்லரை 'அல்து பல்து' விஷயங்கள் யாவும் சிதறி ஓடி, மனம் தெளிவாகி 'நமக்குஇது தான் முக்கியம்' என்பது ஆணி அடித்தது போல் புரிந்தும் விடும்.

நன்றி. சென்று வருகிறேன்.

சாமான்யன்

5:41 AM

UN ..a blank hope.

Posted by Esywara





The bitter truth is the world after all its civilisations...

is still immature..
ignorant and in this case i would say illiterate...
not in the case of conventional education system...
but in drawing a thin line between the
just and unjust...
truth and false...
reason and insanity..

It's absolutely dismaying..
to actually realise that,
the UN Human Rights Council is not an exception....,
(a council held by 47 seats elected every three years,
to defend and speak for the rights of the powerless....),


when its suppose to condemn and ask explanation for indiscriminate shelling..
bombing in no fire zone.. use of heavy artilleries such as cluster bombs, carpet bombs
on civilians .. ,
the council praised the governments effort
describing it as an act of abolishing terrorism..
and bringing peace..



when it acknowledged the commitment of the government to provide access as may be appropriate to humanitarian agencies..,
but never asked to explain why even the Red Cross was not allowed,
even after the end of war, as there were report of heavy casualties,
with tremendous shortage of medical supports.

when it acknowledged the government's claim
on LTTE killing the Tamil MP's during 1990's..,
whereas the government itself has hidden the fact that...
the Sri Lankan Army has been accused for at least killings of 5 MP's..

Arent they aware that...
the mere explanations of Sri Lankan Government ,
and few visits from the UN to the refugee's camps
are not capable and insufficient to unveil the truth
behind the barbed wires and restricted camps...



Arent they aware that...
letting the Tamils at the mercy of the Sri Lankan government forces,
a force that they had feared for so long for assault and brutality,
a force that led 115 massacres on Tamils from 1956 - 2000,
will cause more harm and disharmony...

Arent they aware that,
the whole Tamil Diaspora and all international humanitarian NGO's
had adjudged and condemned the act of Sri Lanka,
that acknowledging Sri Lanka will cause it to
loose its credibility as an world organisation...

Arent they aware off...
the purposedly delayed rehabilation of Tamils to their own land,
even when the war is over,
resembles the government cruel intention...
to cause more injuries and sufferings
in a over crowded concentration camps

they are very well aware that the Sri Lankan Government is in the move
wiping off every possible evidences and witnesses for their ruthless act...

They are aware..
that the future of the refugees
are not as promised by the government..,
because the past answers it..

They are aware ,
that the democracy in Sri Lanka has been misused,
as the constitutional changes increased the Sinhala representation
in the parliment three fold...
'one-man-one-vote' used,

They are aware ,
of the pain and the demand of the Tamil Diaspora
for separate state solution and its justifications..


Yes they are....
but they have been silenced..
some have been brainwashed by the government's
'what-its-want-us-to-see-and-hear,'
some chose to be quiet as they fear for their own country
( u-predict-who-are-they) in future,
some even reasoned that the situation in Sri Lanka has not threatened the international peace..

the Secretary General Ban who told the world ..
that he was appalled by the killings of civilians in the war during his recent visit...
now seems to distance himself and failed to press for a international inquiry...
the U.N spokeman Gordon Weiss, who told ' a blood bath has become reality,'
was silenced too...


I am not here to accuse UN ,
as being useless, or slacking, or hopeless....
which in fact I feel I dont have to..

because the time will answer...
whether the minorities are liberated from terrorism..
or,
the minorities are led into another form of terrorism...

but,
I feel obliged to whatever had happened in Sri Lanka...
as my country , Malaysia
is one of the member in UN Human Rights Council
among the 29 to pass the resolution..
and
I cant stop thinking...,
our country which said that it would not interfere in internal disputes earlier,
now being supportive for Sri Lanka,
neglecting the humanitarian crisis over there,
what would it have in its plan..
for us here ...

and
UN definitely has to face the world,
as people are watching from every corners,
using the lenses of internet,
it may not be able to refuse if it accused to be
a comfort blanket for most perverse an cruel tyrannies in the world..
in future..


8:09 AM

Kebenaran Patut Dihiraukan

Posted by Esywara

Disebabkan pujukan rakan rakan saya , saya menterjemahkan artikel ini yang asalnya dari bahasa inggeris di http://laforet.ca/2009/05/ , dikarya oleh John Laforet, dari Canada . Kita haruslah sedar akan peranan kita dalam krisis kemanusiaan yang dihadapi oleh etnik minoriti Tamil di Sri Lanka… sedangkan negara kita adalah antara negara yang menyokong kerajaan Sri Lanka untuk tidak dibicarakan oleh UN bagi diskriminasi kaum dan peperangan yang masih berlanjutan.

Saya tidak dapat memahami kenapa masih di tahun 2009 ini layanan sebegini terhadap sebuah etnik minority boleh diterima “ok”. Bukankah kita sepatutnya mempelajari teladan ‘tiada lagi,’ selepas melihat kesudahan kekejaman yang dilakukan atas etnik minority yang pernah berlaku beberapa kali sebelum ini. Bukankah dunia telah berjanji dan mendedikasikan dirinya untuk memelihara keselamatan orang awam semasa peperangan dan juga bertindak terhadap kerajaan kuku besi.

Kenapakah kita mendiam diri mengizinkan sebuah kerajaan (kerajaan Sri Lanka) untuk menghalang UN, Red Cross, media dan NGO yang ingin menghulurkan bantuan kepada 300 000 etnik tamil yang diperangkapkan dalam khemah pelarian, walhal kerajaan tersebut telah dituduh oleh Human Rights Watch ( NGO hak asasi manusia antarabangsa ) terhadap kehilangan 18 000 orang awam etnik Tamil. Terdapat banyak laporan seperti kes pemisahan ibu bapa daripada anak anak mereka, rogol, dan kekurangan keperluan asas kehidupan yang kronik. Kerajaan Sri Lanka sebenarnya enggan memberi bantuan yang sepatutnya kepada mereka yang telah ditempatkan di kem tersebut . Mereka tidak menjamin kehidupan orang awam yang ditempatkan itu.

300 000 tamil yang ditempatkan di kem pelarian oleh kerajaan Sri Lanka telah merampas segala hak asasi dan maruah diri mereka serta sentiasa dicabar. Mereka tidak dibenarkan untuk pulang ke tempat asal mereka. Diselubungi pagar pagar berduri , diawasi oleh pihak tentera yang bersenjata, mereka telah kehilangan semua hak hak yang sepatutnya dimiliki di sebuah Negara demokrasi dan bebas.

Tindakan sebegini telah menyukarkan usaha pemulihan , dan membawa kepada kemusnahan kehidupan manusia yang lebih serius disebabkan oleh krisis kemanusiaan yang telah ditimbulkan oleh kerajaan yang tidak bertanggungjawab ini . Hal ini sebenarnya telah mengundang kekejaman yang melampau.

Di bawah adalah satu lagi visual yang telah dikeluarkan oleh SKY News yang menggambarkan penderitaan etnik minority tamil di khemah pelarian dan rayuan mereka.



ITS 2009…!

Kita pernah melihat perkara sebegini sebelum ini. Tidak pernah ada khemah tahanan yang memenuhi segala keperluan asas dengan baik. Tidak pernah ada etnik minority yang ditahan diberi layanan yang sepatutnya sedangkan haknya sendiri tidak dilindungi, dan apatah lagi jika mediapun dilarang masuk . Kita memang sedar akan implikasinya. Kita perlu memperhentikannya sebelum ia terlambat.

Masyarakat antarabangsa harus memberi Sri Lanka amaran terakhir. Perlu menyeru kerajaan Sri Lanka untuk membuka, membenarkan UN, membenarkan Red Cross dan NGO dan Media untuk memaklumkan keadaan sebenar dan menyaksi layanan yang diberi kepada para tahanan. Jika mereka memilih untuk tidak bertranperansi sekali lagi , maka UN haruslah bertanggungjawab untuk menginvokasikan “ hak untuk dipelihara” dan campur tangan – walaupun ia bertentangan daripada hasrat kerajaan demi memelihara nyawa 300 000 tahanan.

4:12 AM

Book by British Tamil Forum

Posted by Esywara

I came across this book ....

a comprehensive history...
of Tamil in Sri Lanka....
and a commentary on the seperate state solution
by British Tamils Forum..
organisation based in UK...
very informative.... do read this... ;)



8:20 PM

Prabhakaran, the soul of Eelam

Posted by Esywara

I saw this article wazz actually left as a comment in thirutamil.blogspot.com ,
so i thought of posting it here....
the original article was in tamil... (the one below)...
I find that my translation work was very tough...
but it has the core issue well stated....
(anyone who can give a better translation , please do so)
I've also posted a related video...


Since 18/5/2009 ...
the controversial issue....
Prabhakaran is alive or dead... ( LTTE Leader),
has stirred the whole world..

Indeed,
he had been
a strong hand ....
among ten others...
he caused a great deed,
but he's not the dealer....

the ultimate dealer was the God Himself....
deed was Prabhakaran's...
but the deed's result is His....
therefore , no one can say ....
that the deed has lost...
for a great deed's result...
will definitely result its own results....

therefore, do not worry, cry, or weakened....
no one should be remorseful....
but instead should rejoice again...

As...
Prabhakaran has turned every Sri Lankan Tamils...
to another Prabhakaran....
Every voice that utters...
" Eelam, our Home Land"
could be none other than his.....
for
his emotions ,his idealism
has propagated within us....
wheter alive or not....
Prabhakaran is worth of thousand strenghts......

Common tamil people calls him as their leader....
but
some even idealised him as an Angel
that their saviour ...
will placed in the great Heaven....

therefore, Global Tamils,
must continue this war of weapons....
transforming it into Gandhi's spiritual war....

Just like,

Eritrea which saw its independence from Ethiopia on 1993,
or
Kosovo which was kept under UN's administration from Serbia ,
or
Bosnio Herzegonia gained its independent administration...
or
Timor Leste was freed from Indonesia....

Tamil Eelam must be formed...
as the seperate state is the only solution....

Global Tamils must work truthfully in this matter...

Time has changed the situation...
the wind is blowing in our side...
the world has witnessed the rise of Tamils
against the unjust,
and preserved it in its memories....

in the mid of oppressions, and pressures,
it's time...
for the rise of Gandhism,
The Sri Lankan Tamils
must justify the seperate state solution in the international arena...

Om Sakthi!




I think when you force a minority to live under a brutal regime ; it continues a convulsed state of affairs. And with Sri Lanka in particular with which I'm familiar, we've had almost fifty years of oppressions of a Tamil minority at the hands of Sinhalese majority.
- Bruce Fein, Chairman of American Freedom Agenda

திருத்தமிழ் வலைத்தளத்தில் இந்த கருத்து பின்னூட்ட மாக விடப்பட்டிருந்ததைக் கண்டேன்..
அதனை எனது வலைத் தளத்தில் பிரசுரிக்கிறேன்... இதனின் ஆங்கில ஆக்கம் வெகு விரைவில்...


18/5/2009 - இல் இருந்து
பிரபாகரன் இருந்தாரா இறந்தாரா ?
இதுவே இன்று உலக அலசல்.....

ஆனால்,
பிரபாகரன் நமது முக்கியம் அல்ல.
பத்து விரலில் ஏதோ ஒரு விரல் ..
அவர் ஒரு செயலுக்கு காரணம் மட்டுமே.
கர்த்தா அல்ல....

கர்த்தா எனப்படுபவன் இறைவன் ..
செயல் பிரபாகரன் உடையது ,
செயலின் முடிவு இறைவனுடையது .
செயல் தோற்றுவிட்டது என்று
யாருக்கும் சொல்ல இங்கு உரிமை இல்லை.
ஒரு செயலின் முடிவு .....
அதத்குரிய பலாபலனை கொண்டு வந்தே தீரும்.

இதனால் சோர்ந்து, துவண்டு , வருந்தி ,
யாரும் ஆழ்ந்த துயரதிட்குள் போக கூடாது ...
குதூகலிக்க வேண்டும் உள்ளம்...

பிரபாகரன் இருந்தால் என்ன இறந்தால் என்ன ...
அவனது ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு தமிழனையும் பீடித்து
ஒவ்வொருவனையும் பிரபாகரனாகவே ஆக்கும் .
அது,
தனி ஈழம் என்றே முழக்கம் இடும் .
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று குரல் கொடுப்பது
அவனாக இருக்க முடியுமே தவிர ,
அது அவரவராக இருக்க முடியாது.
க்ளோனிங் என்பது உலக சத்யமெனில்
ஒவ்வொரு அணுவும் உயிர் பெறும் என்பதும் உலக சத்யம் தானே....

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் , இறந்தாலும் ஆயிரம் பொன்.....
பிரபாகரன் இருந்தாலும் ஆயிரம் பலம்.... இறந்தாலும் ஆயிரம் பலம்.

உலகியல் மக்கள் பிரபாகரனை தலைவன் என்கின்றனர்
ஆன்மீக வாதிகளோ ,
அவன் செவ்வேல் முருகனே என்கின்றனர்.
அவன் தேவருள் வைக்கப்படுவான் என்கின்றனர்.

எனவே , உலக தமிழ் மக்களும் இலங்கை தமிழர்களும்
இந்த பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தை .....
காந்தியின் ஆன்மீகப் போராட்டமாக ஆக்க வேண்டும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ........
அந்த உச்சரிப்பு தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்

1993 - ல் எரிற்றியாவை எதியோபியாவில் இருந்து விடுவித்ததைப் போன்று...
அல்லது
செர்பியாவிடம் இருந்து கொசோவோவை பிரித்து
ஐநா தமது பாதுகாப்பில் நிர்வகித்தது போன்று .
அல்லது
போஸ்னியா - ஹெர்செகோவினா சுயாட்சி போன்று ...
அல்லது,
திமோர் லெஸ்தே இந்தோனேசியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது போன்று
தமிழீழம் விதைக்கப்பட வேண்டும்..

இவ்விடயத்தில் உலகத் தமிழ் மக்கள் சத்தியமாக செயல் பட வேண்டும்....

காலம் கோலத்தை மாற்றிவிட்டது...
அது நமக்கு சாதகம் ...
உலகம் .....
தமிழரின் உலகளாவிய எழுச்சியைக் கண்டு விட்டது...
உலகெங்கும் ஈழப் படுகொலையை எதிர்த்து எழுந்த அலைகள் ...
என்றுமே பசுமை மிக்கது .....

இது,
இளைப்பாறும் நேரமில்லை...
நன்கு துயிலும் தருணமில்லை...

இதுவே காலம் !
மீண்டும் ஒரு காந்தியம் ....
அடக்கு முறைகளுக்கும் இடையிலேயும் ...
புவியெங்கும் எழுந்திடல் வேண்டும்..
ஒவ்வொரு அரங்கிலும் ஈழர் தம் கோரிக்கைகள் நியாயப்படுத்தப்பட வேண்டும்..

"ஈழத்தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் "
அதனை உலகெங்கும் ஒலிக்கச் செய்திட வேண்டும் .....

ஓம் சக்தி !

11:27 AM
Posted by Esywara

18/5/2009 - இல் இருந்து பிரபாகரன் இருந்தாரா இறந்தாரா ? இதுவே இன்று உலக அலசல்..... ஆனால், பிரபாகரன் நமது முக்கியம் அல்ல. பத்து விரலில் ஏதோ ஒரு விரல் .. அவர் ஒரு செயலுக்கு காரணம் மட்டுமே. கர்த்தா அல்ல.... கர்த்தா எனப்படுபவன் இறைவன் .. செயல் பிரபாகரன் உடையது , செயலின் முடிவு இறைவனுடையது . செயல் தோற்றுவிட்டது என்று யாருக்கும் சொல்ல இங்கு உரிமை இல்லை. ஒரு செயலின் முடிவு ..... அதத்குரிய பலாபலனை கொண்டு வந்தே தீரும். இதனால் சோர்ந்து, துவண்டு , வருந்தி , யாரும் ஆழ்ந்த துயரதிட்குள் போக கூடாது ... குதூகலிக்க வேண்டும் உள்ளம்... பிரபாகரன் இருந்தால் என்ன இறந்தால் என்ன ... அவனது ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு தமிழனையும் பீடித்து ஒவ்வொருவனையும் பிரபாகரனாகவே ஆக்கும் . அது, தனி ஈழம் என்றே முழக்கம் இடும் . தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று குரல் கொடுப்பது அவனாக இருக்க முடியுமே தவிர , அது அவரவராக இருக்க முடியாது. க்ளோனிங் என்பது உலக சத்யமெனில் ஒவ்வொரு அணுவும் உயிர் பெறும் என்பதும் உலக சத்யம் தானே.... யானை இருந்தாலும் ஆயிரம் பொன் , இறந்தாலும் ஆயிரம் பொன்..... பிரபாகரன் இருந்தாலும் ஆயிரம் பலம்.... இறந்தாலும் ஆயிரம் பலம். உலகியல் மக்கள் பிரபாகரனை தலைவன் என்கின்றனர் ஆன்மீக வாதிகளோ , அவன் செவ்வேல் முருகனே என்கின்றனர். அவன் தேவருள் வைக்கப்படுவான் என்கின்றனர். எனவே , உலக தமிழ் மக்களும் இலங்கை தமிழர்களும் இந்த பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தை ..... காந்தியின் ஆன்மீகப் போராட்டமாக ஆக்க வேண்டும். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ........ அந்த உச்சரிப்பு தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் 1993 - ல் எரிற்றியாவை எதியோபியாவில் இருந்து விடுவித்ததைப் போன்று... அல்லது செர்பியாவிடம் இருந்து கொசோவோவை பிரித்து ஐநா தமது பாதுகாப்பில் நிர்வகித்தது போன்று . அல்லது போஸ்னியா - ஹெர்செகோவினா சுயாட்சி போன்று ... தமிழீழம் விதைக்கப்பட வேண்டும்.. இவ்விடயத்தில் உலகத் தமிழ் மக்கள் சத்தியமாக செயல் பட வேண்டும்.... காலம் கோலத்தை மாற்றிவிட்டது... அது நமக்கு சாதகம் ... உலகம் ..... தமிழரின் உலகளாவிய எழுச்சியைக் கண்டு விட்டது... உலகெங்கும் ஈழப் படுகொலையை எதிர்த்து எழுந்த அலைகள் ... என்றுமே பசுமை மிக்கது ..... இது, இளைப்பாறும் நேரமில்லை... நன்கு துயிலும் தருணமில்லை... இதுவே காலம் ! மீண்டும் ஒரு காந்தியம் .... அடக்கு முறைகளுக்கும் இடையிலேயும் ... புவியெங்கும் எழுந்திடல் வேண்டும்.. ஒவ்வொரு அரங்கிலும் ஈழர் தம் கோரிக்கைகள் நியாயப்படுத்தப்பட வேண்டும்.. "ஈழத்தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் " அதனை உலகெங்கும் ஒலிக்கச் செய்திட வேண்டும் ..... ஓம் சக்தி !